ஆண்டிபட்டி, டிச. 27: ஆண்டிபட்டி அருகே ராஜதானி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை தலைமையிலான போலீசார் பாலக்கோம்பை-சுந்தரராஜபுரம் விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் தேனி, கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் முருகன்(46) என்பதும், டூவீலரில் இரண்டு மூட்டைகளில் சுமார் 24.750 கிலோ கிராம் அளவுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்த போலீசார் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
