மதுரை, டிச. 27: மதுரையில்,மாற்றுத்திறளானிகளுக்கான குறைதீர் கூட்டம், டிச.30ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.30ம் காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம்.
இந்த மனுக்கள் அனைத்தும், அவர்கள் கோரும் உதவிகள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மனுவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, யூடிஐடி அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
