ஆர்.எஸ்.மங்கலம், டிச. 27: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி தெற்குத் தெருவை சேர்ந்தவர் செல்வ ஹாஜி மனைவி ஹாத்திம் தாய்(60). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், மகள் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த, 22ம் தேதி ஹாத்திம் தாய் வீட்டில் காஸ் அடுப்பில் பால் காய்ச்சிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காஸ் கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
