- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா
- சிவகங்கை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- 101வது கட்சி உருவாக்க நாள்
- மாநில ஜனாதிபதி
- யூனியன்
- சட்டமன்ற உறுப்பினர்
- குணசேகரன்
- நகர செயலாளர்
- சகாயம்
சிவகங்கை, டிச. 27: சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும், 101வது கட்சியின் அமைப்பு தின விழாவும் நடைபெற்றது. விவசாய சங்க மாநில தலைவர், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் கொடியேற்றினார். நகர செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். விழாவில் கட்சியின் வரலாறு, எதிர்கால கடமை உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகள் பேசினர். இதில் மாவட்ட துணை செயலாளர் மருது, ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பு, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பன்னீர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, நகர துணை செயலாளர் பாண்டி, மாதர் சங்க அமைப்பாளர் குஞ்சரம் காசிநாதன், அலுவலக செயலாளர் முருகன், சாத்தப்பன், ஜெயக்குமார் மற்றும் கட்சியனர் பலர் கலந்து கொண்டனர்
