×

ரூ.1.90 கோடியில் வகுப்பறை கட்டிடம்

தர்மபுரி, டிச.27: தர்மபுரி மாவட்டம், பாலஜங்கமனஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில், ரூ.1.90 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமன அள்ளியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.1.90 கோடியில் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தார். தொடர்ந்து திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில், திமுகவினர் இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சிவம், ஒன்றிய செயலாளர்கள் ஏஎஸ் சண்முகம், பெரியண்ணன், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சிவா, ஓய்வுபெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன், துரைசாமி, தொமுச சண்முகராஜ் மற்றும் ஊர்பொதுமக்கள், பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Dharmapuri ,Tamil Nadu ,Chief Minister ,M. Stalin ,Balajangamanalli Government High School ,Balajangamanalli ,Nallampally ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்