×

அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.27: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சி பொ.துறிஞ்சிபட்டியில் அதிமுக., ஜெ.பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட செயலாளர் கேபி. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் மற்றும் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி பொண்ணுவேல், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் அசோகன், ராஜேந்திரன், நல்லதம்பி, சேகர், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன் வரவேற்றார். இந்த பிரசாரத்தில் அதிமுக., அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பெரியக்கண்ணு, தமிழ்மணி நகர செயலாளர் தென்னரசு, சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Pappireddipatti ,J.Peravai ,Pommidi Panchayat Po.Thurinjipatti ,Pappireddipatti Union ,Dharmapuri District ,KP. Anbazhagan ,MLA ,Govindaswamy ,Sampath Kumar ,District ,Secretary… ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்