×

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் திறப்பு விழா

ஊத்தங்கரை. டிச.27: ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடி, ஆண்டியூர் ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பெரியதள்ளப்பாடி பகுதியில் ரூ.10 லட்சம், ஆண்டியூர் பகுதியில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிக்கு அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி தலைமை தாங்கினார். இதில் எம்எல்ஏ தமிழ்செல்வம் கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, நிர்வாகிகள் பியாரோஜான், ஆறுமுகம், தில்லையப்பன், தண்டபாணி, சுப்பிரமணி, அருண், சாம்ராஜ், சின்னத்தம்பி, கோவிந்தன், முனியன், குப்புசாமி, செல்வராஜ், கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Uthankarai ,Periyathallappadi ,Andiyur ,
× RELATED பி.எம்.சி டெக் கல்லூரியில் எரிசக்தி சேமிப்பு தினம்