நாமகிரிப்பேட்டை, டிச.27: நாமகிரிப்பேட்டை பேரூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தேமுதிக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ் தலைமையில், அக்கட்சியில் இருந்து விலகிய 10 பேர் மற்றும் பாஜவிலிருந்து விலகிய 5 பேர், நாமகிரிப்பேட்டை பேரூர் திமுக செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி முன்னிலையில், நேற்று திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட திமுக பொருளாளர் பாலசந்தர், ஆர்.புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளர் ஜெயக்குமார், வார்டு செயலாளர்கள் சுந்தரவேல், பாபு, பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
