×

மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

 

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (26.12.2025) சென்னை, ஜார்ஜ் டவுன், பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் வட சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 241 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன்
ரூபாய் 1 கோடியே 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியினையும் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் மகளிருக்கு உதவிடும் வகையில் ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர்.முத்துலடசுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், என நான்கு வகையான திருமண நிதியுதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் கீழ் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பயின்று தேர்ச்சிப் பெற்ற பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.50,000/-மும், பத்தாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.25,000/-மும் வழங்கப்படுகிறது. இத்துடன் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்றைய தினம் (26.12.2025) வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்த 224 பயனாளிகளுக்கு ரூ.50,000/-வீதம் ரூபாய் 1 கோடியே 12 லட்சமும், பத்தாம் வகுப்பு முடித்த 17 பயனாளிகளுக்கு ரூபாய் 4 லட்சத்து 25 ஆயிரம் என மொத்தம் 241 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகையினையும், திருமாங்கல்யம் செய்வதற்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களையும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா அவர்கள், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்
ரஷ்மி சித்தார்த் ஜகடே, இராயபுரம் மண்டல குழுத்தலைவர் ஸ்ரீராமலு அவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள் செல்வி.ம.ஹரிதா (வடசென்னை), வெ.முத்துச்செல்வி (தென் சென்னை) உட்பட மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Sekharbhabu ,Women's Rights Department ,Chennai ,Minister of ,Hinduism ,and Social Affairs ,P. K. Sekarbaba ,Department of Social Welfare and Women's Rights ,George Town ,Bharati Women's College ,
× RELATED வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள்...