×

ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரு அணிகளாகப் பிரிந்தது.

ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்றொன்று ஓ. பன்னீர்செல்வம் தலைமையில். 2017-இல் இரு அணிகளும் இணைந்து இரட்டைத் தலைமை அமைப்பை உருவாக்கினாலும், 2022-இல் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி, கட்சி ஒருங்கிணைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.2025-ஆம் ஆண்டின் இறுதியில், அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பான விவாதங்கள் எழுந்தன.

ஆனால், இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த , ஜெயக்குமார், அந்தரங்கமாக 4 சுவருக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையை வெளியில் சொல்ல முடியாது. எடப்பாடி மீதான ஓ.பன்னீர்செல்வத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளிக்க ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தார். எதை எப்போது சொல்லவேண்டுமோ, அதை அப்போது சொல்வோம். அரசியலில் ஆயிரம் இருக்கும்; அதையெல்லாம் இப்போது வெளியில் சொல்ல முடியாது.

Tags : O. Panneerselvam ,Jayakumar ,Chennai ,AIADMK ,minister ,Tamil Nadu ,Chief Minister ,Jayalalithaa… ,
× RELATED பொருநை அருங்காட்சியகத்திற்கு...