×

உ.பியில் நினைவு சின்னங்கள், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது புல்டோசர் நடவடிக்கை பாயும்: முதல்வர் யோகி ஆதித்ய நாத் எச்சரிக்கை

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவையில் நேற்று நடந்த துணை பட்ஜெட் மீதான விவாதத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எனது அரசின் முதல் முன்னுரிமை. மாநிலத்தில் உள்ள எந்தவொரு நினைவு சின்னங்கள், புராண தளங்கள் மற்றும் அரசு நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்களை அரசு சும்மா விடாது. அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு இடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும். அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் அவசியம். அந்த பாதுகாப்பான சூழல் காரணமாகவே உத்தரபிரதேசம் மீதான பார்வை தற்போது மாறி உள்ளது. உத்தரபிரதேச மக்கள் இப்போது எங்கே சென்றாலும் பாதுகாப்பான சூழலை உணர்கிறார்கள். எங்கும் கலவரங்கள், அராஜகங்கள் இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய யோகி ஆதித்ய நாத், “உத்தரபிரதேசம் கடந்த ஐந்து ஆண்டுகளில் வருவாய் உபரி மாநிலமாக மாறி உள்ளது. கொள்கை முடக்கம் இல்லை ” என்று கூறினார்.

Tags : UP ,Chief Minister ,Yogi Adityanath ,Lucknow ,Uttar Pradesh Assembly ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்