×

போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா-உக்ரைன் ஒருமித்த கருத்து: அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

கீவ்: உக்ரைன் -ரஷ்யா இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகின்றது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அதிபர் டிரம்ப் சமீபத்தில் ஒரு விரிவான 20 அம்ச சமாதான திட்ட முன்மொழிவை வெளியிட்டுள்ளார். இந்த வரைவு முன்மொழிவு உக்ரைனிடம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக புளோரிடாவில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முன்மொழிவு ரஷ்யாவிடமும் நேற்று வழங்கப்பட்டது. இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,‘‘போரை முடிவுக்கு கொண்டு வரும் பல முக்கிய பிரச்னைகளில் அமெரிக்காவும், உக்ரைனும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன. ஆனால் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள தொழில்துறை மையமான டோன்பாஸ் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாடு மற்றும் சபோரிஜியா அணுமின் நிலையத்தின் மேலாண்மை தொடர்பான சிக்கலான பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது” என்றார்.

Tags : US ,Ukraine ,Chancellor ,Zelensky ,Kiev ,Russia ,President Trump ,
× RELATED தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு