×

காதலனுடன் வீனஸ் வில்லியம்ஸ் 2வது முறையாக திருமணம்

 

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ். முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான 45 வயதான இவர் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் இத்தாலியைச் சேர்ந்த நடிகரும், மாடலிங்கும், தயாரிப்பாளருமான ஆண்ட்ரியா பிரெட்டி என்பவரை காதலித்து வந்தார். இவருக்கு 37 வயதுதான் ஆகிறது. பேஷன் ஷோவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார். கடந்த ஜனவரி 31ம்தேதி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். கடந்த செப்டம்பரில் இத்தாலியின் இஸ்கியா தீவில் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடாவின் பாம் பீச்சில் இந்த ஜோடி 2வது முறையாக திருமணம் செய்துகொண்டனர்.

5 நாட்கள் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் வீனஸ் வில்லியம்சின் தங்கையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் இருவரின் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமண விழாவில் செரீனா பாட்டு பாடி மகிழ்வித்தார்.  45 வயதை தாண்டியும் டென்னிசில் ஓய்வு பெறாத வீனஸ், அடுத்த மாதம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் தொடங்கும் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

Tags : Venus Williams ,Washington ,United States ,Andrea Pretti ,
× RELATED நடிகை குத்திக் கொலை: காதலன் வெறிச்செயல்