சட்டமன்ற தேர்தலுக்கு முன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, ஜன.21: தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற வங்கிகளில், தங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். அவ்வாறு விவசாயம் செய்தாலும், மழை, வெள்ளம், காட்டு விலங்குகளால் பயிர்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமலும், வங்கிகளில் பெற்ற கடனை திரும்பி கட்ட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் கடன்களை திருப்பி செலுத்த நிர்பந்தம் செய்வதால், விவசாயிகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>