தர்மபுரியில் இன்று பாமக ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, ஜன.21: பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டி வரும் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில், தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் அறப்போராட்டம் குறித்து ஒருங்கிணைந்த, தர்மபுரி மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (21ம் தேதி) காலை 11 மணிக்கு, வன்னியர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில், பாமக தலைவர் ஜிகே மணி கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி சிறப்புரையாற்றுகிறார். எனவே பாமகவினர் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>