வாடிப்பட்டி, டிச. 24: தமிழ்நாடு முழுவதும் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களை அடிமையாக்கும் 4 சட்ட தொகுப்புகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன்படி வாடிப்பட்டியில் வாடிப்பட்டி பொது, தையல், கட்டுமானம் மற்றும் உள்ளாட்சி சங்கங்கள் சார்பாக கோரிக்கை வலியுறுத்தி சிஐடியூ மாவட்ட தலைவர் அரவிந்தன் தலைமையில் சென்ட்ரல் வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட 40 பேரை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின் மாலை 5 மணிக்கு அனைவரையும் விடுவித்தனர்.
