×

திருவிடைமருதூரில் ரூ.60 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம் காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

கும்பகோணம், டிச.24: திருவிடைமருதூரில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடத்தை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் திருமஞ்சன வீதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட புதிய நூலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து திருவிடைமருதூர் புதிய நூலக கட்டிடத்தில் முன்னாள் எம்.பி ராமலிங்கம், பேரூராட்சி தலைவர் புனிதா ஜெயபால், துணைத்தலைவர் சுந்தர.ஜெயபால், பேரூர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜி.கே.எம்.ராஜா, திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதின மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி, அம்பலவான தேசிகர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ், பேராசிரியர் பொன்.முத்தையன், ஓய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையர் சம்பந்தம், கவுன்சிலர் ரகுபதி மற்றும் நூலகர் உள்ளிட்ட வாசகர் வட்டத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Thiruvitaymarathur ,Kumbakonam ,Thiruvidaymarathur ,Thiruvidaimarathur Thirumanjana Road ,Thanjavur district ,
× RELATED வத்திராயிருப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி