மார்த்தாண்டம், டிச.24: குழித்துறை கழுவன்திட்டை காலனியை சேர்ந்தவர் விமலா (38). அவருக்கும் வீட்டின் அருகில் உள்ள ஹரீஷ் (35) என்பவருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் விமலாவின் மகள் வீட்டின் முன் வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த சேம்ராஜ் (52), ஹரீஷ் (35), சாம்ராஜ் மனைவி விமலா (35), ஆகியோர் தாய், மகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
