தர்மபுரி, டிச.24: தர்மபுரி மாவட்ட சிறை கண்ணகாணிப்பாளராக சுந்தரபாண்டியன்(பொ) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம், சிறையில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த கைதி அருணாச்சலம்(எ) மேடி(26) என்பவர், 10 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. கண்காணிப்பாளரிடம் சிக்கிய அருணாச்சலத்திடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை பார்க்க வந்த தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வழங்கிய ‘ஜீன்ஸ்’ பேண்ட்டில், கஞ்சாவை வைத்து அவருக்கு கொடுத்துள்ளது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த சிறைத்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
