×

சேலத்தில் ராமதாஸ் தரப்பில் நடைபெறும் பொதுக்குழு பாமகவை கட்டுப்படுத்தாது என்று அன்புமணி தரப்பு அறிக்கை

 

சென்னை: சேலத்தில் ராமதாஸ் தரப்பில் நடைபெறும் பொதுக்குழு பாமகவை கட்டுப்படுத்தாது என்று அன்புமணி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல: அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது என குறிப்பிட்டுள்ளது. சேலத்தில் டிச.29ம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார். பாமக அமைப்பு விதிகள் 15,16ன் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் தலைமையில்தான் நடைபெற வேண்டும். சென்னை, டெல்லி ஐகோர்ட்டில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் அன்புமணிதான் தலைவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் கூட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை புகார் தெரிவித்திருக்கிறது.

Tags : ANBUMANI PARTY ,RAMADAS ,SALEM ,PALMA ,Chennai ,Ramdas ,Palm Gala ,M. K. ,M. ,
× RELATED வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல...