- ஈரோடு மருந்தியல் கல்லூரி முதல்வர்
- ஈரோடு
- இந்தியன்
- மருந்தியல் மாநாடு
- பெங்களூர், கர்நாடகா
- இந்திய மருந்தியல் ஆசிரியர்கள் சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஈரோடு மருந்தியல் கல்லூரி
- சம்பத் குமார்
ஈரோடு, டிச.23: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சமீபத்தில் இந்திய மருந்தியல் மாநாடு நடைபெற்றது. இதில், இந்திய மருந்தியல் ஆசிரியர் சங்கம் மற்றும் மத்திய கிளையும் இணைந்து, தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மஸி கல்லூரி முதல்வர் சம்பத்குமார், தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு, 2025-ம் ஆண்டின் பெல்லோஷிப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் சம்பத்குமாருக்கு கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் நடராஜன், அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் ஜெகநாதன், துணைத்தலைவர் தங்கமுத்து, பொருளாளர் கொழந்தசாமி, நிர்வாக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் என பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
