ஓமலூர்: விடுப்பட் டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி ஆலோசனை வழங்கினார். சேலம் மாவட்டம், ஓமலூர் அதிமுக அலுவலகத்தில், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டு உள்ளவர்களை கண்டறிந்து, சரியான முறையில் நீக்கப்பட்டு உள்ளனரா என சரி பார்க்க வேண்டும். உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களது பெயரை பட்டியலில் மீண்டும் சேர்க்க நிர்வாகிகள், தொண்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
