×

சவுந்தரபாண்டீஸ்வரர் கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா

களக்காடு,டிச.23: களக்காடு அருகேயுள்ள மேலக்கருவேலங்குளத்தில் பழமை வாய்ந்த சவுந்தரபாண்டீஸ்வரர்-கோமதி அம்பாள் கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இக்கோயில் நடராஜர் எழுந்தருளியுள்ள பஞ்சஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா வருகிற 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகங்களும், இரவில் சுவாமி-அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 7ம் திருநாளான 31ம்தேதி பகல் 11.50 மணிக்கு நடராஜர் சேர்க்கையில் இருந்து புறப்பட்டு, கூத்தம்பலம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். இரவில் நடராஜர் சப்பரத்தில் ரதவீதிகளில் உலா வருகிறார். 9ம் நாளான ஜன.2ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. அன்று காலையில் 9.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 10 நாளான 3ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் ஊழியர்களும், மண்டப்படிதாரர்களும் செய்து வருகின்றனர்.

Tags : Thiruvadhirai Aruthra Darshan Festival ,Soundarapandeeswarar Temple ,Kalakkadu ,Soundarapandeeswarar-Gomathi Ambal Temple ,Melakaruvelangulam ,Lord ,Nataraja ,Margazhi… ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...