- தியாகி கோசல்ராம்
- ஆறுமுகநேரி
- சட்டமன்ற உறுப்பினர்
- கே.டி. கோசல்ராம்
- தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தமாகா
- ஆறுமுகநேரி மெயின் பஜார்
- தூத்துக்குடி
- தெற்கு
- மாவட்டம்
- சுந்தரலிங்கம்…
ஆறுமுகநேரி,டிச. 23: ஆறுமுகநேரியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமாகா சார்பில் தியாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.டி. கோசல்ராமின் 110வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்த இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி மத்திய மாவட்டத் தலைவர் எஸ்.டி.ஆர் விஜயசீலன், கே.டி. கோசல்ராம் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதைத்தொடர்ந்து தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஆறுமுகநேரி தங்கமணி, வட்டாரத் தலைவர் திருச்செந்தூர் முருகன், ஆழ்வை முரளி கார்த்திக், வை. அய்யம்பாண்டி, மாநில இணைச்செயலாளர் திருப்பதி, மாநகர தலைவர் ரவிக்குமார், மாவட்டச் செயலாளர் மூக்கன் சாமி, இளைஞர் அணி தலைவர் பொன்ராஜ், ஆறுமுகநேரி நகர தலைவர் பாலமுருகன், மத்திய மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் ஆழ்வை வட்டார இளைஞரணி தலைவர் சரவணன், ஆறுமுகநேரி நகர அதிமுக முன்னாள் செயலாளர் அமிர்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
