- புதுச்சேரி
- 2026
- தவ்லகுப்பம்
- கிறிஸ்துமஸ்
- கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்
- கிரிஸ்துவர்
- மேரி
- கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்
தவளக்குப்பம், டிச. 23: உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம்தேதி கொண்டாடப்படுகிறது. இயேசு தொழுவத்தில் பிறந்ததை நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள் தங்களின் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து, அதில் குழந்தை இயேசு, மரியாள், தேவதூதர்கள், இயேசுவின் சீடர்கள் உள்ளிட்ட பொம்மைகளை வைத்து வழிபடுவர். அந்த வகையில் புதுச்சேரி, அரியாங்குப்பம், உப்புக்கார வீதியில் வசிக்கும் சுந்தரராசு ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது வழக்கம்.
இந்த வருடம் 13வது முறையாக வித்தியாசமான முறையில் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு 2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதற்கான விழிப்புணர்வுவை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் செய்துள்ளார். இந்து மதத்தை பின்பற்றி வரும் இவர் அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசுபெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முந்தைய வருடங்களில் 1 கன செ.மீ கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றார், அதேபோல் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்வது, பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி, மரம் வளர்போம், 25 வகையான சிறு தானிய உணவு, 700 புத்தகங்களை கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை வளர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடில்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
எனவே இன்றைய சூழலுக்கு ஏற்ப சிறப்பு வாக்காளர் திருத்தும் பணி நடந்து முடிந்து, மக்கள் வருகிற 2026 முதல் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ள நிலையில் பல்வேறு புதிய அரசியல் கட்சிகள், புதுமுக வேட்பாளர்கள், புதிய சின்னங்கள் உள்ளன. எனவே மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு வாக்களிப்பதுபோல் தேசியம், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியல் கட்சி தலைவர்களின் போட்டோக்கள் மற்றும் 500 கட்சி கொடிகளைக் கொண்டு குடில் அலங்கரித்துள்ளார். இந்த விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ஆசிரியர் சுந்தரராசு மற்றும் அவர் குடும்பத்தினரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
