தர்மபுரி, டிச.23: தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி சின்னக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அன்பரசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் விவாகரத்து, ஜீவனாம்சம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி கலையரசி தனது இளைய மகள் ஹன்சிகாவை அழைத்துக் கொண்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலையரசியின் தந்தை கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகளை தேடி வருகின்றனர்.
