- ஆவடி சத்யமூர்த்தி நகர் அரசு மேல்நிலைப் பள்ளி
- திருவள்ளூர்
- ஆவடி
- சத்யமூர்த்தி
- நகர் ஊராட்சி
- இரண்டாம்நிலை
- பள்ளி
- கலெக்டர்
- பிரதாப்
- திருவள்ளூர் மாவட்டம்
- திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்
- மாவட்ட வேலைவாய்ப்பு
திருவள்ளூர், டிச.20: ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (20ம் தேதி) ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். முகாமில் 8,10,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், நர்சிங் படித்தவர்கள் கலந்துகொண்டு, வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம், வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள வேலை நாடும் இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
