×

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் ராஜண்ணா மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:
செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா.

தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மிக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றிய சிறப்புக்குரியவர்.
உலகெங்கும் ஒலிக்கும் தமது இசையால் இசைபட வாழ்ந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், இசையுலக அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Nathaswara Vidwan Rajanna ,Chennai ,DMK ,President ,S.R.G. Rajanna ,Nathaswara Vidwan ,Rajanna ,Dharmapuram ,Thiruvavaduthurai ,Thiruppananthal Aatheenangal ,Mayiladuthurai… ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...