- காஞ்சிபுரம்
- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டக் குழு
- காவலன் வாசல்
- ஜனாதிபதி
- செல்லம்
- சிஐடியு
- மாநில துணைப் பொதுச் செயலாளர்...
காஞ்சிபுரம், டிச.19: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில், பழங்குடி மக்கள் காத்திருக்கும் போராட்டம் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் செல்லம் தலைமை தாங்கினார். சிஐடியூ மாநில துணை பொதுச்செயலாளர் முத்துக்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அனு, மாவட்ட செயலாளர் நேரு, விவசாய சங்க செயலாளர் சாரங்கன், நிர்வாகிகள் நந்தகோபால், ஜீவா, பழனி, சங்கர், அஞ்சலி, கோகுல் பாரதி, சீனுவாசன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதில், 2006 வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமனை பட்டா மற்றும் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
