×

சுற்றுலாத்துறையை மேம்படுத்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த பிரத்யேக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். ஓட்டல், ரிசார்ட், சாகச சுற்றுலா, மருத்துவ சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுவதுடன், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி, மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முக்கிய முயற்சியாக இந்த மாநாடு அமையும் என்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : International investors’ conference ,Chennai ,Industries Minister ,T.R.P. Raja ,investors’ ,Tamil Nadu ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...