×

நேஷனல் ஹெரால்டு வழக்கு அரசியல் பழிவாங்கும் வழக்கு: கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு அரசியல் பழிவாங்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை டெல்லி நீதிமன்றம் நிராகரித்ததுடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே 1938 ஆம் ஆண்டு ஆவணத்தை வைத்து கொண்டு அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.,யும் விசாரணையில் இறங்கிதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் குடும்பத்தை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டது என்றும் அவர் சாடினார்.

இந்த வழக்கை பா.ஜ.க.,வினர் முழுமையாக அரசியலுக்கு பயன்படுத்தினார்கள் என்றும். ஆனால் இன்று நீதி வென்றுள்ளது என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். போலி வழக்கை பதிவு செய்வதற்காக பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியல் வழக்குகளை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உரிய முறையில் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்த கார்கே இதைப்போன்ற பொய் வழக்குகள் போட்டுதான் பழைய எம்.பி.களை பாஜக அவர்கள் பக்கம் இழுத்தது என்று சாடினார்.

Tags : National Herald ,Carke ,Delhi ,Congress ,Mallikarjuna Karke ,Delhi court ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் வன்முறை...