×

காந்தி பெயர் நீக்கம் – நாடு முழுவதும் போராட்டம்

 

பெங்களூரு: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து நேற்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். 100 நாள் வேலைத்திட்டத்தின் புதிய மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : Gandhi ,Bengaluru ,Mahatma Gandhi ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Deputy Chief Minister ,D.K. Shivakumar ,
× RELATED ஹர்திக் சிங்கிற்கு கேல் ரத்னா விருது