×

சபரிமலையில் இருந்து 4 பஞ்சலோக சிலைகள் கடத்தல் சென்னை புராதன சிலை கடத்தும் கும்பல் தலைவனிடம் விசாரணை நடத்த முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் புராதன சிலைகளை கடத்தி விற்கும் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை போலீசிடம் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் ரமேஷ் சென்னித்தலாவிடம் விசாரணை நடத்தினர். இதில் சென்னையைச் சேர்ந்த புராதன சிலை கடத்தும் கும்பலுக்கும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் சபரிமலையில் இருந்து 4 பஞ்சலோக சிலைகளை கடத்தி இந்தக் கும்பலிடம் விற்பனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த டி.மணி என்பவர் தான் இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு சென்னை சென்றுள்ளது.

Tags : Panchaloka ,Sabarimala, Chennai ,Thiruvananthapuram ,Travancore Devaswom Board ,Sabarimala Ayyappa temple ,
× RELATED இந்தியாவின் 2 புதிய விமான...