ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹிந்தி படமான ‘ஹோம் பவுண்ட்’ சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படும். நியூயார்க் டைம்ஸில் வெளியான கட்டுரை அடிப்படையில் உருவான ஹோம்பவுண்ட் திரையரங்கு, ஓடிடியில் பெரும் வரவேற்பை பெற்றது.
