மதுரை, டிச. 17: மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்தவர் சுமேற்மல் (48). இவரது மனைவி இந்திராதேவி (43). இவர்களது பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலமாகும். இவர்களுக்கு அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. பொருள் இருப்பு பட்டியலை சரிபார்த்த போது நஷ்ட கணக்கு தெரியவந்தது. அதிலிருந்து சுமேற்மல், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். சம்பவத்தன்று கடையில் இருந்து எஸ்எஸ் காலனியில் உள்ள வீட்டிற்கு சாப்பிட சென்றவர் திரும்பி வரவில்லை. உள்ளே அறை கதவை திறந்து பார்த்த போது சுமேற்மல் தூக்கு போட்டது தெரிந்தது. இரு கைகளிலும் ரத்தம் வழிந்த நிலையில் பிளேடால் கீறல்கள் இருந்தன. இதுகுறித்து எஸ்எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
