- ஸ்டாக்குடி
- சிக்குடி
- ஜெயராமன்
- பூங்கா
- ஜச்செருவாய் கிராமம்
- டிக்குடி
- கடலூர் மாவட்டம்
- டிடாகுடி-தோலோடூ மாநில நெடுஞ்சாலை
- ஜச்செருவாய்
திட்டக்குடி, டிச. 17: திட்டக்குடி அருகே பைக் மோதி மூதாட்டி பலியானார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி பூங்காவனம்(92). இவர் நேற்று கீழ்ச்செருவாய் அருகே திட்டக்குடி-தொழுதூ மாநில நெடுஞ்சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திட்டக்குடி போலீசார் சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
