×

3 கோடி பாலோயர்களை கடந்தது பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: உலக அரசியல் தலைவர்களில் முதலிடம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூன்று கோடி சந்தாதாரர்களைக் கடந்து உலக அளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 26ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 கோடி ஃபாலோயர்களைப் பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் அடைந்தார். மேலும் எக்ஸ் தளத்திலும் இவருக்கு 10 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக நேற்று, அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் உலக அளவில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட அரசியல் தலைவராக அவர் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த புதிய புள்ளி விவரங்களின்படி, பிரதமர் மோடியின் யூடியூப் சந்தாதாரர்களின் எண்ணிக்கை முன்னாள் பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவை விட சுமார் 3 மடங்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப் விட 7 மடங்கும் அதிகமாகும். இந்திய அளவில் ராகுல் காந்தியின் சந்தாதாரர்களை விட 3 மடங்கு அதிகமாகவும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை விட 4 மடங்கு அதிகமாகவும் உள்ளது. இந்த சேனலில், அரசுத் திட்டங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் கலாசார நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

Tags : Modi ,YouTube ,New Delhi ,
× RELATED ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச விமானக் கட்டணங்கள் உயர்வு