×

மேற்கு ஆசியா மோதல்: ஓமன், குவைத், கத்தார் தலைவர்களுடன் மோடி பேச்சு: இந்தியர் நலன் குறித்து விவாதம்

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதல்களும், அதனைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் வெடித்துள்ள பதில் தாக்குதல்களும் அங்கு வாழும் சுமார் ஒரு கோடி இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வளைகுடாவில் உள்ள நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக், குவைத் நாட்டின் இளவரசர் ஷேக் சபா அல் காலித் அல் ஹமாத், கத்தார் நாட்டின் தலைவர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார்.

அந்த நாடுகள் மீதான தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்த மோடி, அங்கு உள்ள இந்தியர்களின் நலன்,பாதுகாப்பு குறித்து அவர்களுடன் விவாதித்தார். கடந்த 2 நாட்களில் பஹ்ரைன் மன்னர் மற்றும் சவுதி பட்டத்து இளவரசர் ஆகியோருடனுடனும் பிரதமர் தொலைபேசியில் பேசினார். இரு நாடுகளின் இறையாண்மையை மீறும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்துள்ளார். மேலும் ஐக்கிய அரபு எமிரேட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சையீத் அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடமும் அவர் பேசினார்.

Tags : West Asia ,Modi ,Oman ,Kuwait ,Qatar ,Indians ,New Delhi ,US ,Israel ,Iran ,Gulf ,Gulf… ,
× RELATED ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச விமானக் கட்டணங்கள் உயர்வு