×

ராயப்பன்பட்டி பகுதியில் கொட்டுது பனி வாழை மரங்களில் காஞ்சாரை நோய் தாக்குதல்

*விவசாயிகள் கவலை

உத்தமபாளையம் : ராயப்பன்பட்டி பகுதியில் கடும் பனி கொட்டுவதால் வாழைமரங்களைல் காஞ்சாரை நோய் தாக்குதலுக்கு உள்ளாகின. இதனால், விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் அதிகமான ஏக்கர் பரப்பில் வாழை விவசாயம் நடைபெறுகிறது.

குறிப்பாக சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, ஓடைப்பட்டி, ஆனைமலையன்பட்டி, சுருளிப்பட்டி என இந்த சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் வாழை விவசாயம் நடைபெறுகிறது.

இந்நிலையில், வாழை விவசாயத்திற்கு பெரும் சவாலாக இருப்பது பனிக்காலம். குறிப்பாக டிசம்பர் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் அதிகமான அளவில் பனி கொட்டும் என்பதால் வாழை விவசாயிகள் கலங்கிப் போய் உள்ளனர்.

குறிப்பாக தற்போது வாழையில் வாழையில் காஞ்சாரை தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நோய் கடந்த வாரம் முதல் அதிகரித்துள்ளது. பச்சை இலைகள் கருகி சோகைகளாக நிற்கிறது. இதனால் மகசூல் பாதிக்கும் என தெரிகிறது. இந்த நோய் ஜி 9 மற்றும் நாழிப்பூவன் உட்பட சில ரகங்களில் அதிகம் காணப்படுகிறது. செவ்வாழை, நேந்திரன் ரகங்களில் இல்லை.

இதனால் அதிகளவில் தற்போது மருந்துகள் தெளித்து வருகின்றனர். இதன் காரணமாக காய்களை வெட்டும் போதே சிலவற்றை பழுத்து வருகின்றன. காஞ்சாரையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கை வேளாண்மை துறையினர் உடனடியாக ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ‘‘பனிக்காலங்களில் பொதுவாக வாழையில் காஞ்சாரை தாக்குதல் இருக்கும். ஆனால் இந்தாண்டு தற்போது கூடுதல் பனிப்பொழிவு உள்ளது. எனவே காஞ்சாரை அதிகமாக உள்ளது.

இதற்கு காரணம் இடைவெளி குறைவாக நடவு செய்வது தான். நோய் தாக்கிய மரங்களிலிருந்து சோகைகளை அப்புறப்படுத்தி எரித்துவிட வேண்டும். தழைச்சத்து உரங்களை குறைக்க வேண்டும். நேந்திரன், செவ்வாழையில் இடைவெளி அதிகம் இருப்பதால் சூரிய வெளிச்சம், காற்றோட்டம் கிடைக்கிறது. எனவே காஞ்சாரை நோய் தாக்குதல் இல்லை’’என்றனர்.

Tags : Rayappanpatti ,Uttampalayam ,Theni district ,Chinnamanur ,Kambam ,Gudalur ,
× RELATED ஜனநாயகன் படத்திற்கு ...