×

இப்படி இருந்தா தண்ணீர் எப்படி போகும் 2ம் கட்ட விரிவாக்கத்தின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை: பெண்களுக்கு ஏடிஎம் கார்டுகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்

புதுக்கோட்டை, டிச. 13: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், துணை முதலமைச்சர் முன்னிலையில் சென்னையில், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து, 10 மகளிர்க்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், கற்பகவிநாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் கலந்து கொண்டு, மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ‘தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, மகத்தான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்” என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.03.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதல் கட்டமாக சுமார் 1.13 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், மேலும், 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு உரிமைத்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இதன்மூலம், மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயன்பெறுவர். இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், எம்எல்ஏக்கள் முத்துராஜா (புதுக்கோட்டை),.சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), மாநகராட்சி துணை மேயர்.லியாகத் அலி, ஆர்டிஓ ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), அனைத்து வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kalaignar ,Raghupathi ,Meiyanathan ,Pudukottai ,Tamil ,Nadu ,Chief Minister ,Tamil Nadu government ,Tamil Nadu ,Chennai… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...