×

பெண் பத்திரிகையாளருடன் சசிதரூர் எம்பி நெருக்கமா?.. வைரலாகும் படத்தால் சர்ச்சை

புதுடெல்லி: பெண் பத்திரிகையாளருடன் சசிதரூர் எம்பி நெருக்கமாக இருக்கும் படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிதரூர். தற்போது பிரதமர் மோடியுடன் நெருக்கமாக உள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் இவர், இதற்கு முன்பு அவரது மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்தின் போது சர்ச்சையில் சிக்கினார். தற்போது பெண் பத்திரிகையாளர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படம் வெளியாகி சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஆர்.டி இந்தியாவின் செய்தித் தலைவர் ரஞ்சுன் சர்மாவுடன் , சசிதரூர் இருக்கும் படங்கள் இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை ரஞ்சுன் சர்மா தான் பகிர்ந்துள்ளார். இந்தியா-ரஷ்யா உறவுகள் மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவம் குறித்த அவரது கடந்தகால ஆர்.டி. தொடர்களைப் பற்றி விவாதிக்கும் ஆர்.டி. நிகழ்ச்சியில் சசிதரூர் பங்கேற்றுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக அமர்ந்து எடுத்த படங்கள் வைரலாகி வருகிறது. ரஞ்சுன் சர்மா ஒரு அனுபவமிக்க பத்திரிகையாளர். மாஸ்கோவில் உள்ள ஆர்டி நிறுவனத்தின் மிக முக்கியமான தெற்காசிய நிருபர்களில் ஒருவர். அவர் இரண்டு யுஎன்பிஎப்ஏ(UNFPA)லாட்லி விருதுகளை (2015, 2020) வென்றுள்ளார்.

அரசியலுக்காக ரெட் இன்ங் சிறப்பு விருதை 2019ல் பெற்றுள்ளார். உக்ரைன் போருக்கு முன்பே அவர் ஆர்.டி. மாஸ்கோவில் பணியாற்றினார். சமீபத்தில், ரஷ்ய அதிபர் புடின் வருகையில் ஆர்.டி. இந்தியா தொலைக்காட்சி சேனலின் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

Tags : Shashi Tharoor ,New Delhi ,Congress ,Thiruvananthapuram ,Modi ,
× RELATED கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில்...