×

14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பாமக சார்பில் விருப்ப மனு: அன்புமணி தரப்பு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுவை சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து வரும் 14ம்தேதி முதல் விருப்ப மனு பெறப்படும் என்று அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.

பாமக தலைமை (அன்புமணி) சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 20ம்தேதி சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

அதன்படி, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 20ம்தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

Tags : Tamil Nadu Legislative Assembly Election ,Tamil Nadu Legislative Assembly ,Anbumani Party ,Chennai ,Palamaka ,Tamil Nadu ,New Legislative Assembly ,Bhamaka ,Anbumani ,
× RELATED தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்...