×

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்..!!

கேரளா: சபரிமலை மண்டலப் பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். தற்போது தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

மகரவிளக்கு பூஜைக்கு முந்தைய 2 நாட்களிலும், மண்டல பூஜையை முன்னிட்டு டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளிலும் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இதுவரை தொடங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் வரும் 26, 27 ஆகிய தேதிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணி முதல் தொடங்குகிறது. 26ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும், 27ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்றுடன் இவ்வருட மண்டல காலம் நிறைவடையும்.

Tags : Mandala Puja ,Sabarimala ,Kerala ,Sabarimala Ayyappa temple ,Makaravilakku season ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...