×

திருப்பதி உண்டியல் எண்ணுவதில் மோசடி; மீண்டும் எப்ஐஆர் பதிந்து விசாரிக்க வேண்டும்: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணியில் ரூ.100 கோடி மோசடி நடந்ததாக எஸ்.ஐ.டி. விசாரணை அறிக்கை வழங்கியது. இந்த மோசடி வழக்கில் மீண்டும் எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி மற்றும் ஏ.சி.பி டி.ஜி.க்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக் அதாலத்தில் சமரச வழக்குடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாரின் சொத்துக்கள் குறித்து விசாரணையை தொடர சி.ஐ.டி மற்றும் ஏசிபி டி.ஜி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவல் நிலையத்தில் புகார் அளித்த அப்போதைய மாஜி விஜிலென்ஸ் அதிகாரி சதீஷ்குமாரின் கொலை செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க சி.ஐ.டிக்கு உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் வருமானவரித்துறை மற்றும் அமலாக்க இயக்குனரகத்துடன் பகிரவும் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tirupati ,Andhra Pradesh High Court ,Tirumala ,SIT ,Tirupati Ezhumalaiyan Temple ,CID ,ACP ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...