×

தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் உயரமாக வளர்ந்து நிற்கும் கோரைப்புல்

 

துவரங்குறிச்சி, டிச.9: தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் வளர்ந்து நிற்கும் கோரைப் புல்லை அகற்ற வாகன ஓட்டிகள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் நடுவே உள்ள சென்டர் மீடியன்களில் அழகுக்காக செடிகள் நடப்பட்டு அதிகளவில் செடிகள் வளர்ந்து நிற்கின்றன. கூடவே அதிகளவில் கோரைப் புற்களும் மண்டியுள்ளதால் அவற்றை உண்பதற்காக கால்நடைகள் சாலையைக் கடந்து செல்கின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்லக்கூடிய கார்கள் திடீரென வேகத்தை குறைத்து செல்லும்போது விபத்து ஏற்பட நேரிடுகிறது.

Tags : National Highway ,Thuraranguchi ,Tiruchi-Madurai National Highways ,Trichchi District ,
× RELATED துறையூர் அருகே ரூ.49 லட்சம் மதிப்பில்...