×

திருச்சி மாநகரில் குட்கா விற்ற 4 பேர் கைது

திருச்சி,மார்ச்.2: திருச்சி கண்டோன்மெண்ட் செஷன்ஸ் கோர்ட் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பிப்.28ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற கே.கே நகர் காமராஜர் தெருவை சேர்ந்த பிரசாத் (43) என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே குட்கா விற்ற பொன்மலைப்பட்டி உடையன் தெருவை சேர்ந்த கணேசன் (40) மற்றும் பொன்னகர் அருகே குட்கா விற்ற திண்டுக்கல் ரோடு பகுதியைச் செய்த குமார் (29) மற்றும் பொன்நகர் பகுதியில் குட்கா விற்ற அதே பகுதியை சேர்ந்த முருகன் (29) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 300 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

 

Tags : Trichy ,Cantonment Sessions Court ,Kamarajar Street, K.K. Nagar ,Bus ,
× RELATED திருச்சி டூவீலர் திருடியவர் கைது