×

விஜய் திவஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்க வங்கதேச குழுவினர் 20 பேர் இந்தியா வருகை

கொல்கத்தா: கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்காள தேச விடுதலை போர் நடந்தது. டிசம்பர் 3ம் தேதி தொடங்கிய போர் முடிவில் டிசம்பர் 16ம் தேதி இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் படை சரண் அடைந்தது. இதன் மூலம் அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம் ) தனிநாடாக உருவானது. இந்த போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிச.16ம் தேதி விஜய் திவஸ் கொண்டாட்டங்கள் நடைபெறும். இதையொட்டி கொல்கத்தாவில் நடக்கும் விஜய் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வங்கதேச ராணுவ அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழு 15ம் தேதி இந்தியா வருகிறது.

Tags : India ,Vijay ,Diwas ,Kolkata ,Bangladesh Liberation War ,Pakistan ,Pakistani ,Indian Army ,
× RELATED உலக அளவில் ஊக்கமருந்து பரிசோதனையில்...