×

காஞ்சி ஏகாம்பரநாதரை வணங்கினால் எல்லா பிணிகளும் விலகி வளமும் நலமும் பெறலாம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் என்பது பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத்தலங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் தலவிருட்சம் மாமரமாகும். திருக்குறிப்பு தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம் இதுவாகும்.இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த மணலாலான சிவலிங்கத் திருவுருவை கண்டு பூசித்தார். கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுக தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது மணல் லிங்க திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலை தழும்பும் தோன்ற காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.

மூம்மூர்த்திகள் வழிபட்ட கம்பர் (வெள்ளக்கம்பர், கள்ளக் கம்பர், நல்லக்கம்பர்) அமைய பெற்றமையால் திருவேகம்பம் என்ற பெயர் பெற்றது. இது முக்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மைபெற்றது. சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சூளுறவு பிழைத்ததின் காரணமாக திருவொற்றியூர் எல்லையை தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறைய பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்பு தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமய குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சிய நேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.

ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாக கருதப்படும் இக்கோயில், 2ம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது என கருதப்பட்டாலும், இக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுகள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகிறது. இதன் காலம் பொ.ஊ. 1509 என கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது. வெளிமதில் பொ.ஊ. 1799ல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. பாழ்பட்டு கிடந்த பழைய சிலைகள் உள்ளிட்ட புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் கோயிலோடு சேர்த்து புதுப்பிக்கப்பட்டன. சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துகள் இருக்கின்றன. விஜயநகர சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கிறது.

இங்க சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மற்ற கோவில்களை போல அம்மனுக்கு தனியாக சந்நிதி கிடையாது. பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்க சொன்னார் சிவபெருமான், பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக்கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களை செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். இது முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முதன்மை பெற்றது.

சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்தபோது ”உன்னைப் பிரியேன்” என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாக கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம்மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயி லொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகிறது. காஞ்சி ஏகாம்பரநாதரை வணங்கினால் எல்லா பிணிகளும் நீங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

Tags : Kanchi Ekambaranathar ,Kanchipuram ,Ekambaranathar Temple ,Thondai Naduthalas ,Tamil Nadu ,
× RELATED அனைத்தையும் கடந்த ஞானிகள்!