×

அதிகரட்டியில் நாளை மின்தடை

 

ஊட்டி, டிச. 7: அதிகரட்டி துணை மின்நிலையத்தில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தாநாயகி கூறியிருப்பதாவது: ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி துணை மின்நிலையத்தில் நாளை 8ம்தேதி (திங்கள்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின்நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதிநகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Athikaratty ,Ooty ,Athikaratty substation ,Nilgiris Electricity Distribution Circle ,Supervising Engineer ,Shanthanayagi ,
× RELATED ஊட்டி மத்திய பஸ்நிலையத்தில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி