×

ஊட்டி ரோஸ்மவுண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு நடைபாதையை மீட்க கோரி மறியல்

 

ஊட்டி, மார்ச் 10: ஊட்டி அருகே ரோஸ்மவுண்ட் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருப்பதை மீட்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் மாளிகை செல்லும் சாலையின் மேற்புறம் ரோஸ்மவுண்ட் பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்த பொது நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து மக்கள் பயன்படுத்த அனுமதிக்காமல் இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் தடுப்புகள் ஏற்படுத்தி நடைபாதையை முற்றிலுமாக அடைத்துள்ளதாக தெரிகிறது. இப்பிரச்னை தொடர்பாக பல முறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிப்பிற்குள்ளான பொதுமக்கள் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் இருந்து பிங்கர்போஸ்ட் செல்லும் தமிழகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Rosemount ,Ooty ,Tamil Nadu Palace ,Ooty, Nilgiris district ,Rosemount… ,
× RELATED பெண் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு சட்டவிரோதமாக மது விற்றவர் கைது